window.addEventListener('load', function() { }, false);

இரகசியத்தன்மை கொள்கை

இந்த பாலிசியின் நோக்கம் வெண்டர்ஸ், (மற்றும்/அல்லது அவர்களின் ஊழியர்கள்), பார்ட்னர்ஸ், மெம்பர்ஸ், டிரான்ஸ்யூனியன் CIBIL லிமிடெட் இன் எண்ட்-யூசர்ஸ் அல்லது யாருடைய பர்சனல் இன்ஃபர்மேஷனை நாங்கள் பெறுகிறோமோ, அவர்களின் அந்தரங்கத்தை பராமரிப்பதும் மற்றும் பர்சனல் இன்ஃபர்மேஷனை பாதுகாப்பதும் ஆகும். மேலும் எங்களுக்கு பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கும் இணங்குவதை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.

இந்த தனியுரிமைக் கொள்கையின் ("பிரைவசி பாலிசி") உள்ளடக்கங்கள் www.transunioncibil.com/terms-and-conditions என்ற முகவரியில் கிடைக்கும் பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் ("பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்") சேர்ந்து,www.transunioncibil.com மற்றும் www.cibil.com ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து ஹைப்பர்லிங்குகள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் போன்ற பிற சேனல்களுக்கும் ("வெப்சைட்கள்") பொருந்தும்.

இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதன் மூலம் மற்றும்/அல்லது உங்கள் பர்சனல் இன்ஃபர்மேஷனை எங்களுக்கு வழங்க வெளிப்படையாகச் சம்மதிப்பதன் மூலம், இந்த பிரைவசி பாலிசியின் விதிகளைப் படித்து ஏற்றுக்கொண்டதாக நீங்கள் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள, வரையறுக்கப்படாத பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்கள், பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் (TnC) குறிப்பிடப்பட்டுள்ள பொருளைக் கொண்டிருக்கும்.

டிரான்ஸ்யூனியன் CIBIL-இன் தனியுரிமை அறிக்கை ("பிரைவசி ஸ்டேட்மெண்ட்")

இந்த தனியுரிமைக் கொள்கை வெப்சைட்ஸ்களில் தகவல்களைச் சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, வெளிப்படுத்துகிறது, சேமிக்கிறது மற்றும் பாதுகாப்பது குறித்த எங்களது பாலிசிகள் மற்றும் நடைமுறைகளை விளக்குகிறது.

எங்களது பிரைவசி பாலிசி விளக்குவது:

  • நாங்கள் என்ன தகவல்களைச் சேகரிக்கிறோம், எப்படி மற்றும் ஏன் / எந்த நோக்கத்திற்காகச் சேகரிக்கிறோம்
  • அந்தத் தகவலை எப்படிப் பயன்படுத்துகிறோம்.
  • தகவல்களை வெளிப்படுத்துதல்
  • பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள்
  • மாற்றங்கள்
  • உங்களுடைய பர்சனல் இன்ஃபர்மேஷன் குறித்த உங்களது கவலைகளைத் தீர்ப்பது

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் மற்றும் எப்படிச் சேகரிக்கிறோம் என்பது குறித்து

"பர்சனல் இன்ஃபர்மேஷன்" என்பது ஒரு தனிநபரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மற்ற தகவல்களுடன் சேர்த்து அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தகவலையும் குறிக்கும் மற்றும் இதில் சென்சிட்டிவ் பர்சனல் டேட்டா அல்லது இன்ஃபர்மேஷன் அடங்கும், இது பின்வரும் தகவல்களைக் கொண்ட பர்சனல் இன்ஃபர்மேஷனைக் குறிக்கிறது:

  • பாஸ்வேர்டு;
  • பேங்க் அக்கவுண்ட் அல்லது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது இதர பேமெண்ட் இன்ஸ்ட்ருமெண்ட் விவரங்கள் போன்ற ஃபைனான்சியல் இன்ஃபர்மேஷன்;
  • பிஸிக்கல், பிசியாலஜிக்கல் மற்றும் மெண்டல் ஹெல்த் கண்டிஷன்;
  • மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஹிஸ்டரி;
  • பயோமெட்ரிக் இன்ஃபர்மேஷன்;
  • மேலே குறிப்பிட்டுள்ளவை தொடர்பான இதர விவரங்கள் எதுவாக இருந்தாலும்;

பொதுவெளியில் தாராளமாகக் கிடைக்கக்கூடிய அல்லது அணுகக்கூடிய அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 அல்லது தற்போது அமலில் உள்ள வேறு எந்தச் சட்டத்தின் கீழும் வழங்கப்பட்ட எந்தவொரு தகவலும் சென்சிட்டிவ் பர்சனல் டேட்டா அல்லது இன்ஃபர்மேஷனாகக் கருதப்படமாட்டாது.

வெப்சைட்டை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம், உங்களையோ அல்லது யாருடைய தகவலை வழங்க உங்களுக்கு அதிகாரம் உள்ளதோ அந்த தனிநபரையே அடையாளம் காணக்கூடிய பர்சனல் இன்ஃபர்மேஷனை எங்களுக்கு வழங்க நீங்கள் முன்வரலாம். நீங்கள் பயன்படுத்தும் புராடக்ட்ஸ் மற்றும் சர்வீசஸ் மற்றும் உள்ளூர் சட்டத்தைப் பொறுத்து, டிரான்ஸ்யூனியன் CIBIL-க்கு வழங்க நீங்கள் தேர்வு செய்யக்கூடிய பர்சனல் இன்ஃபர்மேஷன்கான சில உதாரணங்கள்: பெயர், முகவரி, அடையாளம் மற்றும் முகவரி சான்று, PIN கோடு, பாலினம், வயது, ஏதேனும் தனிப்பட்ட யுனிக் ஐடென்டிஃபையர் (PAN போன்றவை), மின்னஞ்சல் முகவரி, எண், பேமெண்ட் விவரங்கள், காண்டாக்ட் இன்ஃபர்மேஷன், பில்லிங் இன்ஃபர்மேஷன், லோன் அக்கவுண்ட் எண்கள், டிரான்ஸ்யூனியன் CIBIL-க்கு நீங்கள் வழங்கும் ரெஃபரன்ஸ், மென்டர்ஸ் அல்லது காண்டாக்ட்ஸ் போன்ற தேர்டு பார்ட்டி பற்றிய தகவல்கள் (அது உங்களுக்குத் தொடர்புடையதாக இருந்தால் அல்லது அவர்களின் தெளிவான எழுத்துப்பூர்வ சம்மதத்தை நீங்கள் பெற்றிருந்தால்).

நாங்கள் தானாகவே சேகரித்து வருகிற தகவல்கள்

உண்மையில், நீங்கள் யார் என்று எங்களிடம் சொல்லாமலோ, உங்களைப் பற்றிய எந்த தனிப்பட்ட தகவலையும் வெளிப்படுத்தாமலோ, இந்த வெப்சைட்டை பார்வையிடலாம். நாங்கள் எங்களது வெப்சைட்டை பயன்படுத்தும் எங்கள் பார்வையாளர்கள் பற்றியும், அவர்களுடைய டிவைஸ் சம்பந்தமான சில தகவல்களையும், அனலிடிக்ஸ் தகவல்களையும் வழக்கமாக சேகரித்து வருகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் எங்களை/எங்கள் வெப்சைட்களை விசிட் செய்யும் இன்டர்நெட் புரோட்டோகால் (IP) அட்ரஸை நாங்கள் டிராக் செய்கிறோம். இந்த IP அட்ரஸ் மூலம் உங்களது பெயர் அல்லது காண்டாக்ட் டீடைல்ஸை வைத்து உங்களை எங்களால் அடையாளம் காண முடியாது, ஆனால் நீங்கள் வெப்சைட்டை விசிட் செய்யும்போது உங்களது டிவைஸுடன் கம்யூனிகேஷனை மெயின்டெய்ன் செய்ய இது எங்களை அனுமதிக்கிறது. இது, நீங்கள் எந்த இடத்திலிருந்து மற்றும் எந்த நாட்டிலிருந்து எங்களைப் பார்வையிடுகிறீர்கள் என்பதையும் அடையாளம் காண எங்களுக்கு உதவுகிறது. நீங்கள் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலிருந்து தானாக கிடைக்கும் தகவல்களை பயன்படுத்தி, எங்கள் வெப்சைட்டில் நீங்கள் எந்த பக்கங்களைப் பார்வையிட்டீர்கள், எங்கள் வெப்சைட்டிற்கு வருவதற்கு முன்பு நீங்கள் எந்த வெப்சைட்டில் இருந்தீர்கள், மேலும் வெளியேறிய பிறகு நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதையும் நாங்கள் அறிந்து கொள்கிறோம். எங்கள் பார்வையாளர்கள் இந்த வெப்சைட்டை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் புள்ளிவிவரங்களை நாங்கள் உருவாக்குகிறோம். எங்கள் வெப்சைட்டின் பயன்பாட்டை அளவிடவும், அதனை நிர்வகித்து மேம்படுத்தவும், இத்தகவலை முழுமையாக பயன்படுத்துகிறோம். பயனாளர்கள் எதிர்பார்க்கும் உள்ளடக்கத்தை, அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வடிவத்தில் வழங்குவதற்கான எங்களது தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த புள்ளிவிவரத் தகவல்களை நாங்களே பகுப்பாய்வு செய்கிறோம்.

உங்களது இன்டர்நெட் பிரவுசர் / டிவைஸ் செட்டிங்ஸ் மூலம் நீங்கள் அனுமதித்திருந்தால், உங்கள் டிவைஸிலிருந்து குறிப்பிட்ட சில இதர தகவல்களும் ஆட்டோமேட்டிக்காக சேகரிக்கப்படலாம், இவை உங்கள் டிவைஸில் வெப்சைட்களை சரியாகக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும்.

நாங்கள் சேகரித்த பர்சனல் இன்ஃபர்மேஷனை, அந்தத் தகவல் எந்த நோக்கத்திற்காகச் சேகரிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காகத் தேவைப்படும் காலத்தை விட அதிக காலத்திற்கு அல்லது தற்போது அமலில் உள்ள ஏதேனும் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் வைத்திருக்க வேண்டிய காலத்தைத் தாண்டி நாங்கள் வைத்திருக்க மாட்டோம். இருப்பினும், CICRA-வின் விதிகளின்படி, CICRA-வின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள கிரெடிட் இன்ஃபர்மேஷன் மற்றும் பர்சனல் டேட்டாவை, சேகரிக்கப்பட்ட தேதியிலிருந்து குறைந்தபட்சம் 7 (ஏழு) ஆண்டுகள் வரை நாங்கள் வைத்திருக்க வேண்டும்.

தொகுப்பின் நோக்கம்

எங்கள் கஸ்டமர்ஸ் மற்றும் எண்ட்-யூசர்ஸ்க்கு எங்களது புராடக்ட்ஸ் மற்றும் சர்வீசஸ் வழங்குவதற்காக நாங்கள் சேகரிக்கும் தகவல்கள். மேலும், நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் உங்களுக்கு வழங்கும் சர்வீசஸை மேம்படுத்தவும் மற்றும்/அல்லது CICRA உள்ளிட்ட பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் உள்ள கடமைகள்/பணிகள் அல்லது உங்களுடனான கான்ட்ராக்சுவல் அரேஞ்ச்மென்ட்ஸ் ஆகியவற்றை நிறைவேற்றவும் பயன்படுத்தப்படுகின்றன. உங்களது பெயர் மூலம் உங்களை அடையாளம் காண முடியாத உங்களது IP அட்ரஸ் அல்லது பிற ஜெனரிக் ஐடென்டிஃபையரை நாங்களோ அல்லது எங்களது தேர்டு பார்ட்டி சர்வீஸ் புரொவைடரோ சேகரிப்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். சில நேரங்களில், விசிட்டர்கள் எங்கள் வெப்சைட்களின் பல்வேறு பகுதிகளை எவ்வளவு அடிக்கடி விசிட் செய்கிறார்கள் என்பது குறித்த தகவல்களைச் சேகரிக்கவும் இந்த ஐடென்டிஃபையர்ஸை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

தனிப்பயனாக்கம். உங்கள் ஆன்லைன் எக்ஸ்பீரியன்ஸைப் புரிந்துகொள்ள, மேம்படுத்த மற்றும் பெர்சனலைஸ் செய்வதற்காக, குக்கீஸ் மற்றும் இதர டெக்னிக்கல் மெத்தட்ஸ் மூலம் சேகரிக்கப்பட்ட உங்களது கிரெடிட் இன்ஃபர்மேஷன் அல்லது இதர தகவல்களை, பெர்சனலி ஐடென்டிஃபையபிள் இன்ஃபர்மேஷனுடன் நாங்கள் இணைக்கலாம். டிரான்ஸ்யூனியன் CIBIL வழங்கும் சர்வீஸஸை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவும், டிரான்ஸ்யூனியன் CIBIL அதன் செயல்பாடுகளைப் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் உங்களுடனான கான்ட்ராக்சுவல் அரேஞ்ச்மென்ட்ஸ் ஆகியவற்றின் படி மேற்கொள்ளவும், உங்கள் சம்மதத்துடன் பெயர், பிஸிக்கல் மற்றும் மின்னஞ்சல் முகவரி, போன் நம்பர் போன்ற பர்சனல் இன்ஃபர்மேஷனை நாங்கள் சில நேரங்களில் சேகரிக்கலாம். நாங்கள் கேட்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என நீங்கள் முடிவு செய்தால், அப்போதும் நீங்கள் இந்த வெப்சைட்டை விசிட் செய்யலாம், ஆனால் உங்களால் சில ஆப்ஷன்ஸ், ஆஃபர்ஸ் மற்றும் சர்வீசஸை அணுக முடியாமல் போகலாம்.

சர்வீசஸ் வழங்குதல் மற்றும் இதர நோக்கங்கள். பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டால் மற்றும் அதற்கு உட்பட்டு, டிரான்ஸ்யூனியன் CIBIL உங்களது தகவல்களை தேர்டு பார்ட்டிஸுடன் (அதன் மெம்பர்ஸ் மற்றும் பார்ட்னர்ஸ் உட்பட லிமிடெட் இல்லை) CICRA-வின் கீழ் உள்ள அதன் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்காக அல்லது அதனுடன் தொடர்புடைய ஆக்டிவிட்டீஸ்களுக்காகப் பகிரலாம். டிரான்ஸ்யூனியன் CIBIL தனது சார்பாக பணிகளைச் செய்வதற்காகத் தான் வேலைக்கு அமர்த்தியுள்ள கம்பெனிஸ் மற்றும் தனிநபர்களிடம் தகவல்களை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக எங்களது வெப் சர்வர்ஸை ஹோஸ்ட் செய்வது, டேட்டாவை அனலைஸ் செய்வது, மார்க்கெட்டிங் அசிஸ்டன்ஸ் வழங்குவது, கார்டு பேமெண்ட்ஸை பிராசஸ் செய்வது, கஸ்டமர் சர்வீஸ் வழங்குவது போன்றவை அடங்கும். இதுபோன்ற வெளிப்படுத்துதல்களுக்கு நீங்கள் சம்மதித்தால், டிரான்ஸ்யூனியன் CIBIL அத்தகைய தகவல்களை தேர்டு பார்ட்டிஸிடம் வெளிப்படுத்தலாம். தேர்டு பார்ட்டிஸின் ஆப்பர்சூனிட்டீஸ், புரோடக்ட்ஸ் அல்லது சர்வீசஸ் பற்றிய தகவல்களைப் பெற விரும்புவதாக நீங்கள் வெளிப்படையாகத் தெரிவித்தால், உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப அல்லது மற்ற வழிகளில் உங்களைத் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில், டிரான்ஸ்யூனியன் CIBIL உங்களது காண்டாக்ட் இன்ஃபர்மேஷனை தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்டு பார்ட்டிஸிற்கு (அதன் மெம்பர்ஸ் மற்றும்/அல்லது பார்ட்னர்ஸ் உட்பட லிமிடெட் இல்லை) அல்லது இதர நபர்களுக்கு வழங்கும். இத்தகைய அக்ரிகேட்டட் டேட்டா வெப்சைட்டின் யூசர்ஸையோ அல்லது எண்ட்-யூசர்ஸையோ தனித்தனியாக அடையாளம் காணாது, மேலும் இது பல்வேறு மார்க்கெட் இன்டர்மீடியரிஸ்க்குக் கிடைக்கச் செய்யப்படலாம். டிரான்ஸ்யூனியன் CIBIL, தான் சேகரிக்கும் தகவல்களை புராடக்ட்ஸ் மற்றும் சர்வீசஸ்க்காகப் பயன்படுத்தலாம்; புராடக்ட்ஸ் மற்றும் சர்வீசஸை வழங்க, பராமரிக்க, பாதுகாக்க மற்றும் மேம்படுத்தவும், புதியவற்றை உருவாக்கவும், மற்றும் டிரான்ஸ்யூனியன் CIBIL மற்றும் எங்களது இதர கன்ஸ்யூமர்ஸைப் பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்தலாம். டிரான்ஸ்யூனியன் CIBIL உங்களுக்கு ஏற்றவாறு உள்ளடக்கத்தை வழங்கவும் இந்தத் தகவலைப் பயன்படுத்துகிறது - உதாரணமாக உங்களுக்கு மிகவும் பொருத்தமான சர்ச் ரிசல்ட்ஸ் மற்றும் அட்வர்டைஸ்மென்ட்ஸ் வழங்குவது போல. டிரான்ஸ்யூனியன் CIBIL-இன் புராடக்ட்ஸ் மற்றும் சர்வீசஸ் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க, அதாவது வரவிருக்கும் மாற்றங்கள் அல்லது இம்ப்ரூவ்மென்ட்ஸ் போன்றவற்றை உங்களுக்குத் தெரிவிக்க, மின்னஞ்சல் முகவரி மற்றும் இதர விவரங்களை டிரான்ஸ்யூனியன் CIBIL பயன்படுத்தலாம்.

நாங்களோ அல்லது எங்களது மெம்பர்ஸ் மற்றும்/அல்லது பார்ட்னர்ஸ் யாராவது உங்களுக்குப் பயனளிக்கும் என்று நாங்கள் நம்பும் அத்தகைய புராடக்ட்ஸ்/சர்வீசஸ் பற்றிய ஆஃபர்ஸ்/இன்ஃபர்மேஷனை வழங்க உங்களை அவ்வப்போது தொடர்பு கொள்ளலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

டிரான்ஸ்யூனியன் CIBIL-இன் பிஸ்னஸ் யூனிட்ஸில் ஏதேனும் ஒன்றை அல்லது அனைத்தையும் கையகப்படுத்தும் ஒரு தேர்டு பார்ட்டிக்கு அத்தகைய தகவல்களை டிரான்ஸ்யூனியன் CIBIL வெளிப்படுத்தலாம் மற்றும் டிரான்ஸ்பர் செய்யலாம்; அத்தகைய கையகப்படுத்துதல் என்பது மெர்ஜர், கன்சாலிடேஷன் அல்லது எங்களது அஸெட்ஸின் முழு அல்லது கணிசமான பகுதியை வாங்குவதன் மூலம் அல்லது அனுமதிக்கப்பட்ட வேறு எந்த வழியிலும் இருக்கலாம்.

தகவல்களை வெளிப்படுத்துதல்

ரெஜிஸ்ட்ரேஷன் அல்லது பிற செயல்முறைகளின் போது நீங்களோ அல்லது கன்ஸ்யூமர்ஸோ பகிர்ந்து கொண்ட பர்சனல் இன்ஃபர்மேஷனை வெரிஃபிகேஷன் நோக்கங்களுக்காக நாங்கள் பயன்படுத்தலாம், மேலும் வெரிஃபிகேஷன் நோக்கங்களுக்காக மட்டுமே இத்தகைய தகவல்களை தேர்டு பார்ட்டிஸுடன் டிரான்ஸ்யூனியன் CIBIL பகிர்வதற்கு கஸ்டமர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் அனுமதிக்கிறார். எங்கள் கன்ஸ்யூமர் கிரெடிட் இன்ஃபர்மேஷன் டேட்டாபேஸை அப்டேட் செய்ய நீங்கள் வழங்கும் தகவலை நாங்கள் பயன்படுத்தலாம்.

இந்தியாவின் பொருந்தக்கூடிய சட்டங்களின்படி அல்லது எங்களது தேர்டு பார்ட்டி சர்வீஸ் புரொவைடர்ஸ் அல்லது ஏதேனும் தேர்டு பார்ட்டியுடனான எங்களது ஒப்பந்தத்தின்படி, உங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட இத்தகைய தகவல்களை நாங்கள் அரசு அதிகாரிகளுக்கோ அல்லது எந்தவொரு நீதிமன்றத்திற்கோ வழங்கலாம். இருப்பினும், உங்கள் பர்சனல் இன்ஃபர்மேஷனைப் பெறும் அத்தகைய தேர்டு பார்ட்டி, ஏதேனும் சட்டத்தின் கீழ் தேவைப்பட்டாலன்றி, அதை மேலும் வெளிப்படுத்தக் கூடாது.

சட்டத்தின்படி தேவைப்படும்போது, சிவில் அல்லது கிரிமினல் சம்மன்ஸ் / சப்-பீனாக்களுக்கான பதில்கள் அல்லது சட்ட அமலாக்கப் பணியாளர்களின் பிற கோரிக்கைகள் போன்ற சமயங்களில், பர்சனல் இன்ஃபர்மேஷனை நாங்கள் வெளிப்படுத்த வேண்டியிருக்கலாம். டிரான்ஸ்யூனியன் CIBIL-க்கு எதிராக உலகெங்கிலும் உள்ள எந்த நாட்டிலும் கொண்டு வரப்பட்ட நீதிமன்ற உத்தரவு, நடந்து கொண்டிருக்கும் ஜுடிசியல் பிரசிடிங், சப்-பீனா அல்லது பிற லீகல் பிராசஸ் அல்லது கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டியது அவசியம் என்று நாங்கள் நம்பும்போது அல்லது எங்கள் லீகல் ரைட்ஸை பயன்படுத்த அல்லது லீகல் க்ளெய்ம்ஸிலிருந்து பாதுகாக்க, நாங்கள் அத்தகைய தகவல்களை வெளிப்படுத்துவோம்.

கூடுதலாக, CICRA-வின் விதிகளின்படி டிரான்ஸ்யூனியன் CIBIL-ஆல் பெறப்பட்ட கிரெடிட் இன்ஃபர்மேஷனை வெளிப்படுத்துவது என்பது, அத்தகைய வெளிப்படுத்துதல் CICRA-வின் விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே செய்யப்படும். CICRA-வின் விதிகளின்படி, டிரான்ஸ்யூனியன் CIBIL-இன் அனைத்து ஊழியர்கள், மேலாளர்கள், அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள், ஏஜென்ட்கள், சப்-கான்ட்ராக்டர்கள் மற்றும் டேட்டா, இன்ஃபர்மேஷன் மற்றும் கிரெடிட் இன்ஃபர்மேஷனை கையாள்பவர்கள் அல்லது அவற்றை அணுக உரிமை உள்ள இதர நபர்கள், கான்பிடன்சியாலிட்டி, ஃபிடிலிட்டி மற்றும் சீக்ரசி கடமைகளுக்குக் கட்டுப்படுவது அவசியமாகும் மற்றும் இது தொடர்பான உடன்படிக்கைகளில் கையெழுத்திட வேண்டும்.

தேர்டு பார்ட்டி சைட்ஸ்களுக்கான லிங்க்

நாங்கள் மற்ற தேர்டு பார்ட்டிகளின் வெப்சைட்ஸ்களுக்கு லிங்க் செய்யலாம். இந்த தேர்டு பார்ட்டி வெப்சைட்ஸ்கள் அந்த வெப்சைட்ஸ்களில் உங்களைப் பற்றிய பர்சனல் இன்ஃபர்மேஷனை சேகரிக்கலாம், மேலும் எங்களது பிரைவசி பாலிசி இந்த வெளிப்புற வெப்சைட்ஸ்கள் மற்றும் தேர்டு பார்ட்டிகளுக்குப் பொருந்தாது. தயவுசெய்து அவர்களின் தனியுரிமைக் கொள்கைகள் தொடர்பாக இந்த தேர்டு பார்ட்டிஸையும் வெப்சைட்டையும் நேரடியாக அணுகவும். தேர்டு பார்ட்டி சைட்ஸ்களுக்கான லிங்க்ஸ் என்பது அந்த சைட்ஸ்களை டிரான்ஸ்யூனியன் CIBIL அங்கீகரிப்பதாகவோ அல்லது ஒப்புதல் அளிப்பதாகவோ அர்த்தமல்ல, மேலும் எங்களால் கட்டுப்படுத்தப்படாத எந்தவொரு வெப்சைட்ஸ்களின் பிரைவசி நடைமுறைகளுக்கும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது. நீங்கள் பார்வையிடும் எந்த தேர்டு பார்ட்டி சைட்களின் பிரைவசி பாலிசிகளை மதிப்பாய்வு செய்ய நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.

நாங்கள் எப்படி தகவல்களைச் சேகரிக்கிறோம் என்பது குறித்து

எங்கள் தேர்டு பார்ட்டி சர்வீஸ் புரொவைடர்ஸ் உட்பட எங்களது சில வெப் பேஜஸ் "குக்கீஸ்"-களை ஸ்டோர் செய்து பயன்படுத்துகின்றன, இதன் மூலம் நீங்கள் மீண்டும் எங்கள் சைட்டிற்கு வரும்போது உங்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட தகவல்களை எங்களால் சிறப்பாக வழங்க முடியும். குக்கீஸ் என்பது ஒரு வெப்சைட் உங்கள் பிரவுசருக்கு அனுப்பக்கூடிய ஐடென்டிஃபையர்ஸ் ஆகும், இது நீங்கள் அடுத்த முறை எங்கள் சைட்டிற்கு வருவதை எளிதாக்க உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும். உங்களுக்கு ஒரு குக்கீ அனுப்பப்படும்போது உங்களுக்குத் தெரிவிக்கும் வகையில் உங்கள் பிரவுசரை நீங்கள் செட் செய்யலாம், இது அதை ஏற்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் ஆப்ஷனை உங்களுக்கு வழங்குகிறது.

குக்கீஸ் மற்றும் இதர டெக்னிக்கல் மெத்தட்ஸ் மூலமாக தகவல்கள் நேரடியாக எங்களுக்கோ அல்லது எங்கள் சார்பாக தகவல்களைச் சேகரிக்க எங்களால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு பார்ட்டிக்கோ அனுப்பப்படலாம். இந்த டெக்னிக்கல் மெத்தட்ஸைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் தகவல்கள், உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய வகையில் சேகரிக்கப்படலாம். எங்கள் அட்வர்டைசர்ஸிடமிருந்து நீங்கள் குக்கீஸைப் பெறலாம். இந்த குக்கீஸை நாங்கள் கட்டுப்படுத்துவது இல்லை, மேலும் நீங்கள் அட்வர்டைஸ்மென்ட்டை கிளிக் செய்து எங்கள் வெப்சைட்டை விட்டு வெளியேறியதும், எங்களது பிரைவசி பாலிசி உங்களுக்குப் பொருந்தாது.

நாங்கள் உங்களுக்கு அனுப்பும் HTML இ-மெயில்ஸிலும் பின்வரும் பல்வேறு நோக்கங்களுக்காக இந்த டெக்னிக்கல் மெத்தட்ஸை பயன்படுத்துகிறோம்: நீங்கள் அந்த இ-மெயில்ஸைத் திறந்தீர்களா அல்லது ஃபார்வர்டு செய்தீர்களா மற்றும்/அல்லது அந்த இ-மெயில்ஸில் உள்ள லிங்க்ஸை கிளிக் செய்தீர்களா என்பதைத் தீர்மானிக்க; நீங்கள் ஒரு இ-மெயிலை மூடிய பிறகு பேனர் அட்வர்டைஸ்மென்ட்ஸ் மற்றும் இதர மெசேஜஸ் டிஸ்ப்ளே ஆவதைக் கஸ்டமைஸ் செய்ய; மற்றும் ஒரு குறிப்பிட்ட இ-மெயிலுக்குப் பதிலளிக்கும் விதமாக நீங்கள் ஏதேனும் என்கொயரி அல்லது பர்ச்சேஸ் செய்துள்ளீர்களா என்பதைத் தீர்மானிக்க.

அப்ளிகேஷன்

இந்த பிரைவசி பாலிசி மற்ற கம்பெனிஸ் அல்லது தனிநபர்களால் வழங்கப்படும் சர்வீசஸ்க்குப் பொருந்தாது; இதில் சர்ச் ரிசல்ட்ஸில் உங்களுக்குக் காட்டப்படக்கூடிய புராடக்ட்ஸ் அல்லது சைட்ஸ், டிரான்ஸ்யூனியன் CIBIL சர்வீசஸை உள்ளடக்கிய சைட்ஸ் அல்லது எங்களது சர்வீசஸிலிருந்து லிங்க் செய்யப்பட்டுள்ள இதர சைட்ஸ் ஆகியவையும் அடங்கும். இந்த பிரைவசி பாலிசி, எங்களது சர்வீசஸை அட்வர்டைஸ் செய்யும் மற்றும் ரெலவன்ட் ஆட்ஸ் வழங்க குக்கீஸ், பிக்சல் டேக்ஸ் மற்றும் இதர டெக்னாலஜீஸை பயன்படுத்தும் இதர கம்பெனிஸ் மற்றும் ஆர்கனைசேஷன்ஸின் இன்ஃபர்மேஷன் பிராக்டிசஸை உள்ளடக்காது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள்

பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தேவைப்பட்டாலன்றி அல்லது எங்களது மெம்பர்ஸ் மற்றும்/அல்லது அபிலியேட்ஸ் உங்களுக்கு லோன்ஸ் பெற உதவுவதற்காகவோ அல்லது எங்களது மெம்பர்ஸ் மற்றும் அபிலியேட்ஸின் பிஸ்னஸ் தொடர்பான இதர நோக்கங்களுக்காகவோ தவிர, உங்களது சம்மதம் இல்லாமல் எந்தவொரு ஆன்லைன் சர்வீஸிற்கான ரெஜிஸ்ட்ரேஷன் அல்லது பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட எந்தவொரு தகவலையும் (பெயர்கள் மற்றும் முகவரிகள் உட்பட) நாங்கள் விற்கவோ, வர்த்தகம் செய்யவோ அல்லது தேர்டு பார்ட்டிஸிடம் வெளிப்படுத்தவோ மாட்டோம். இது லீகல் பிராசஸ் மூலம் தேவைப்படும்போது அல்லது யாருக்காவது பிஸிக்கல் ஹார்ம் ஏற்படும் சூழலில் மட்டும் விதிவிலக்காகும். மேலும், உங்கள் ரெஜிஸ்ட்ரேஷனை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காகவும் மற்றும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பெனிபிட்ஸை வழங்குவதற்காகவும், டிரான்ஸ்யூனியன் CIBIL தனது மெம்பர்ஸ், அபிலியேட்ஸ் ஆகியோரை இந்த இன்ஃபர்மேஷனை அணுக அனுமதிக்கும்.

உங்களால் வழங்கப்பட்ட சம்மதத்தை நீங்கள் திரும்பப் பெற்றவுடன், உங்களால் அல்லது எந்தவொரு கன்ஸ்யூமரால் பகிரப்பட்ட பர்சனல் இன்ஃபர்மேஷனை டிரான்ஸ்யூனியன் CIBIL எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தாது அல்லது வைத்திருக்காது. டிரான்ஸ்யூனியன் CIBIL வழங்கும் சர்வீசஸிலிருந்து அன்சப்ஸ்கிரைப் செய்வதன் மூலமாகவோ அல்லது சம்மதத்தை வாபஸ் பெறுவது குறித்த எழுத்துப்பூர்வமான நோட்டீஸை டிரான்ஸ்யூனியன் CIBIL-க்கு அனுப்புவதன் மூலமாகவோ நீங்கள் உங்கள் சம்மதத்தைத் திரும்பப் பெறலாம்.

நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பாதுகாக்கத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம். உங்களின் பெர்சனலி ஐடென்டிஃபையபிள் இன்ஃபர்மேஷனின் அந்தரங்கத்தை அன்ஆதரைஸ்டு ஆக்சஸ் மற்றும் முறையற்ற பயன்பாடு அல்லது வெளிப்படுத்துதலில் இருந்து பாதுகாக்க, நாங்கள் ரீசனபிள் செக்யூரிட்டி பிராக்டிசஸ் மற்றும் புரொசீஜர்ஸ், டெக்னாலஜி மற்றும் செக்யூரிட்டி ஃபீச்சர்ஸ் மற்றும் கடுமையான பாலிசி கைட்லைன்ஸை அமல்படுத்தியுள்ளோம். புதிய டெக்னாலஜி கிடைக்கும்போது எங்களது செக்யூரிட்டி புரொசீஜர்ஸை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம்.

இந்த பிரைவசி பாலிசி மற்றும்/அல்லது ஜெனரல் TNC-ல் குறிப்பிட்டுள்ளபடி தவிர, உங்களால் வழங்கப்பட்ட பர்சனல் இன்ஃபர்மேஷனை டிரான்ஸ்யூனியன் CIBIL உங்கள் சம்மதம் இல்லாமல் பப்ளிஷ் செய்யாது.

பர்சனல் இன்ஃபர்மேஷன் தொலைந்து போவது, திருடப்படுவது, மாற்றப்படுவது அல்லது பிற தவறான பயன்பாடுகளில் இருந்து பாதுகாக்க இத்தகைய ரீசனபிள் எஃபர்ட்ஸ் எடுத்தபோதிலும், அத்தகைய இழப்பு ஏற்படவே செய்யாது என்று எங்களால் கேரண்டி அளிக்க முடியாது. எங்கள் அனுமதி இல்லாமல் ஒரு தேர்டு பார்ட்டி சட்டவிரோதமாக எங்கள் சிஸ்டம்ஸை அணுகவோ அல்லது வேறு வழிகளில் பர்சனல் இன்ஃபர்மேஷனை அணுகவோ எப்போதும் ஒரு ரிஸ்க் உள்ளது. நாங்கள் ரீசனபிள் மெஷர் எடுத்தாலும், உங்களால் வழங்கப்பட்ட அல்லது வெப்சைட்ஸ்களை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் சேகரிக்கப்பட்ட பர்சனல் அல்லது இதர எந்தவொரு தகவலின் நம்பகத்தன்மைக்கும் நாங்கள் பொறுப்பல்ல.

குழந்தைகளின் பிரைவசி

இந்த வெப்சைட்ஸ்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கவர்வதற்காகவோ அல்லது அவர்கள் பயன்படுத்துவதற்காகவோ உருவாக்கப்படவில்லை அல்லது வடிவமைக்கப்படவில்லை. இணையதளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர் என்பதை அல்லது விடுவிக்கப்பட்ட மைனர் என்பதை அல்லது சட்டப்பூர்வமான பெற்றோர் அல்லது கார்டியன் சம்மதத்தைப் பெற்றுள்ளீர்கள் என்பதையும், இந்த பிரைவசி பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள், நிபந்தனைகள், கடமைகள், உறுதிமொழிகள், பிரதிநிதித்துவங்கள் மற்றும் வாரண்டிகளை ஏற்றுக்கொள்வதற்கும், பின்பற்றுவதற்கும் மற்றும் கட்டுப்படுவதற்கும் உங்களுக்கு முழுமையான திறனும் தகுதியும் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகிறீர்கள்.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான கார்டியனின் தெளிவான அனுமதி இல்லாமல் எந்தவொரு பர்சனல் இன்ஃபர்மேஷனையும் எங்களுக்குச் சமர்ப்பிக்கக் கூடாது. உங்கள் குழந்தை பர்சனல் இன்ஃபர்மேஷனை சமர்ப்பித்துள்ளதாக நீங்கள் நம்பினால் மற்றும் எங்களது சிஸ்டம்ஸிலிருந்து அவர்களின் தகவல்களை நீக்கக் கோர விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள காண்டாக்ட் இன்ஃபர்மேஷன் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற நாங்கள் தகுந்த முயற்சிகளை மேற்கொள்வோம்.

மாற்றங்கள்

இந்த பிரைவசி பாலிசியை எப்போது வேண்டுமானாலும் மாற்றுவதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது, எனவே இதை அடிக்கடி ரிவ்யூ செய்யவும். நாங்கள் இந்த பிரைவசி பாலிசியில் முக்கியமான மாற்றங்களைச் செய்தால், எங்கள் ஹோம் பேஜில் ஒரு நோட்டீஸ் மூலம் அது குறித்து உங்களுக்குத் தெரிவிப்போம். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்ட பிறகு, எங்களது சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அந்த மாற்றங்களுக்கு நீங்கள் சம்மதம் தெரிவிக்கிறீர்கள்.

எதிர்காலத்தில் எங்களது பிரைவசி பாலிசி மாறினால், அது இங்கே பதிவிடப்படும் மற்றும் புதிய நடைமுறைக்கு வரும் தேதி காண்பிக்கப்படும். எங்களது தற்போதைய பாலிசிகளை நீங்கள் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்த, எங்களது பிரைவசி பாலிசியை நீங்கள் வழக்கமாக அணுக வேண்டும். டிரான்ஸ்யூனியன் CIBIL அனைத்து ரீசனபிள் கன்சர்ன்ஸ் அல்லது என்கொயரிஸ்க்கும் ஒரு ரீசனபிள் பீரியட் ஆஃப் டைம்க்குள் பதிலளிக்க முயற்சிக்கும்.

டிரான்ஸ்யூனியன் CIBIL அறிவிப்புகளை, அத்தகைய அறிவிப்புகள் சட்டப்படி தேவைப்படுபவையாக இருந்தாலும் அல்லது மார்க்கெட்டிங் அல்லது இதர பிஸ்னஸ் தொடர்பான நோக்கங்களுக்காக இருந்தாலும், மின்னஞ்சல் நோட்டீஸ், எழுதப்பட்ட அல்லது ஹார்ட் காப்பி நோட்டீஸ் (ஃபேக்ஸ் உட்பட) அல்லது வெப்சைட்டில் அத்தகைய நோட்டீஸைப் பதிவிடுவதன் மூலம் உங்களுக்கு வழங்கலாம். உங்களுக்கு அறிவிப்புகளை வழங்குவதற்கான வடிவம் மற்றும் வழிகளைத் தீர்மானிக்கும் உரிமையை டிரான்ஸ்யூனியன் CIBIL கொண்டுள்ளது, எனினும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட சில அறிவிப்பு முறைகளில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளலாம். நாங்கள் உங்களுக்கு வழங்கும் மின்னஞ்சல் அறிவிப்புகளுக்கு நீங்களோ அல்லது உங்கள் நெட்வொர்க் புரொவைடரோ பயன்படுத்தும் எந்தவொரு ஆட்டோமேட்டிக் ஃபில்டரிங்கிற்கும் டிரான்ஸ்யூனியன் CIBIL பொறுப்பல்ல.

நாங்கள் மார்க்கெட்டிங் நோக்கங்களுக்காக மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வெப்சைட்டில் நீங்களோ வழங்கும் டெஸ்டிமோனியல்ஸ்/ஃபீட்பேக்கை பயன்படுத்தத் தேர்வு செய்யலாம். எங்கள் மக்கள் மற்றும் சர்வீசஸிற்காக, எங்கள் வெப்சைட்டில் ஏதேனும் சஜஷன்ஸ், ஃபீட்பேக் அல்லது கமெண்ட்ஸ் அளிப்பதன் மூலம், அவற்றை டிரான்ஸ்யூனியன் CIBIL மார்க்கெட்டிங் நோக்கங்களுக்காக பப்ளிஷ் செய்ய நீங்கள் அனுமதிப்பதாக ஒப்புக்கொள்கிறீர்கள்.

கூகுள் ஆட்வேர்ட்ஸ் ரீமார்க்கெட்டிங்

விளக்கம்:

இந்த வெப்சைட் (www.transunioncibil.com) மற்றும்/அல்லது மொபைல் அப்ளிகேஷன்ஸ் போன்ற பிற சேனல்கள் கன்ஸ்யூமர் பிஹேவியரை அனலைஸ் செய்ய உதவ கூகுள் ஆட்வேர்ட்ஸ் ரீமார்க்கெட்டிங் சர்வீசஸை பயன்படுத்துகின்றன. கன்ஸ்யூமர் எப்போது எங்களது வெப்சைட்டை விசிட் செய்தாலும், கூகுள் சிஸ்டம் கன்ஸ்யூமரின் சிஸ்டத்தில் குக்கீஸை (ஐடி டேக்ஸ் கொண்ட சிறிய டேட்டா டெக்ஸ்ட் ஃபைல்களின் தொகுப்பு) சேமிக்கும். கன்ஸ்யூமர் எங்களது வெப்சைட்டை விட்டு வெளியேறி, எங்களது வெப்சைட்டிற்குத் தொடர்புடைய (பேங்க்ஸ் போன்றவை) கன்டென்ட் அல்லது வெப்சைட் கொண்ட வேறொரு வெப்சைட்டிற்குச் செல்லும்போது, முன்னதாக கன்ஸ்யூமர் டிரான்ஸ்யூனியன் CIBIL-ன் வெப்சைட்டில் இருந்தபோது கூகுளால் சேமிக்கப்பட்ட குக்கீஸின் அடிப்படையில், அந்த வெப்சைட்களில் கூகுள் எங்களது ஆட்ஸை டிஸ்ப்ளே செய்யும். எங்கள் சைட்டில் ஒரு டாஸ்க்கை முடிக்காத முந்தைய விசிட்டர்ஸ்களுக்கு (உதாரணமாக, என்கொயரி செய்ய காண்டாக்ட் ஃபார்மை பயன்படுத்தாதவர்கள்) நாங்கள் விளம்பரம் செய்வதை இது குறிக்கலாம். சேகரிக்கப்பட்ட எந்தவொரு டேட்டாவும் எங்களது சொந்த பிரைவசி பாலிசி மற்றும் கூகுளின் பிரைவசி பாலிசியின் படி பயன்படுத்தப்படும்.

சேகரிக்கப்பட்ட டேட்டாவின் பிரைவசி:

நாங்கள் எங்கள் சைட்டிற்கு வரும் விசிட்டர்ஸ்களின் பர்சனலி ஐடென்டிஃபையபிள் இன்ஃபர்மேஷனை (PII) ட்ராக் செய்யவோ அல்லது சேகரிக்கவோ ஸ்டாட்டிஸ்டிக்கல் அனலிட்டிக்ஸ் டூலைப் பயன்படுத்த மாட்டோம். டிரான்ஸ்யூனியன் CIBIL, ஒரு கம்ப்யூட்டர் யூசரின் அடையாளத்துடன் ஒரு IP அட்ரஸை இணைக்கவோ அல்லது இணைக்க முற்படவோ மாட்டாது. இந்தத் தளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட எந்தவொரு டேட்டாவையும், எந்த இடத்திலிருந்தும் பெறப்பட்ட 'பெர்சனலி ஐடென்டிஃபையபிள் இன்ஃபர்மேஷன்' உடன் நாங்கள் இணைக்க மாட்டோம். கூகுள் ஆட்வேர்ட்ஸ் பிரைவசி பாலிசி பற்றிய தகவல்களை இந்த லிங்க்கில் காணலாம்: https://support.google.com/adwordspolicy/answer/143465?hl=en

கூகுள் ரீமார்க்கெட்டிங் குறித்த தகவல்கள்:

இந்த இணையதளம் கூகுள் டிஸ்ப்ளே நெட்வொர்க்கில் டெக்ஸ்ட் அல்லது இமேஜ் ஆட்ஸ் மூலம் ஆன்லைனில் விளம்பரம் செய்ய கூகுள் ரீமார்க்கெட்டிங்கை பயன்படுத்துகிறது. ரீமார்க்கெட்டிங் என்பது எங்களது சைட்டை ஏற்கனவே விசிட் செய்தவர்களைச் சென்றடைய உதவும் ஒரு ஃபீச்சர் ஆகும்; அவர்கள் கூகுள் டிஸ்ப்ளே நெட்வொர்க்கில் உள்ள பிற சைட்ஸ்களை விசிட் செய்யும்போது, அவர்களுக்குப் பொருத்தமான ஆட்ஸை இது காண்பிக்கும்.

வெப்சைட் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

ரீமார்க்கெட்டிங் மேற்கொள்வதற்காக, எங்கள் வெப்சைட் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிட்ட சில நிபந்தனைகளைச் சேர்க்குமாறு கூகுள் அறிவுறுத்தியுள்ளது, அவை - டிஸ்ப்ளே அட்வர்டைசிங் (உதாரணமாக, ரீமார்க்கெட்டிங், கூகுள் டிஸ்ப்ளே நெட்வொர்க் இம்ப்ரெஷன் ரிப்போர்டிங், டபுள் கிளிக் கேம்பெய்ன் மேனேஜர் இன்டெக்ரேஷன், அல்லது கூகுள் அனலிட்டிக்ஸ் டெமோகிராபிக்ஸ் அண்ட் இன்ட்ரஸ்ட் ரிப்போர்டிங்) அடிப்படையில் செயல்படுத்தப்படும் கூகுள் அனலிட்டிக்ஸ் ஃபீச்சர்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

டிரான்ஸ்யூனியன் CIBIL ஆன்லைனில் விளம்பரம் செய்ய கூகுள் அனலிட்டிக்ஸ் உடன் ரீமார்க்கெட்டிங்கை பயன்படுத்துகிறது. கூகுள் உட்பட தேர்டு பார்ட்டி வெண்டார்கள் இணையம் முழுவதும் உள்ள சைட்ஸ்களில் டிரான்ஸ்யூனியன் CIBIL-இன் ஆட்ஸைக் காட்டலாம்.

டிரான்ஸ்யூனியன் CIBIL மற்றும் கூகுள் உள்ளிட்ட தேர்டு பார்ட்டி வெண்டார்கள், இணையதள விசிட்டர்களின் கடந்த கால விசிட்களின் அடிப்படையில் விளம்பரங்களைத் தெரிவிக்க, மேம்படுத்த மற்றும் வழங்க, ஃபர்ஸ்ட்-பார்ட்டி குக்கீஸ் (கூகுள் அனலிட்டிக்ஸ் குக்கீ போன்றவை) மற்றும் தேர்டு பார்ட்டி குக்கீஸை (டபுள்-கிளிக் குக்கீ போன்றவை) ஒன்றாகப் பயன்படுத்துகின்றனர்.

டிரான்ஸ்யூனியன் CIBIL மற்றும் கூகுள் உள்ளிட்ட தேர்டு பார்ட்டி வெண்டார்கள், உங்களது ஆட் இம்ப்ரெஷன்ஸ், விளம்பரச் சேவைகளின் பிற பயன்பாடுகள் மற்றும் இந்த ஆட் இம்ப்ரெஷன்ஸ் மற்றும் விளம்பரச் சேவைகளுடனான தொடர்புகள் ஆகியவை டிரான்ஸ்யூனியன் CIBIL இணையதள விசிட்களுடன் எவ்வாறு தொடர்புடையவை என்பதை ரிப்போர்ட் செய்ய, ஃபர்ஸ்ட்-பார்ட்டி குக்கீஸ் (கூகுள் அனலிட்டிக்ஸ் குக்கீஸ் போன்றவை) மற்றும் தேர்டு பார்ட்டி குக்கீஸை (டபுள்-கிளிக் குக்கீ போன்றவை) ஒன்றாகப் பயன்படுத்துகின்றனர்.

டிரான்ஸ்யூனியன் CIBIL, கூகுளின் இன்ட்ரஸ்ட்-பேஸ்டு அட்வர்டைசிங் அல்லது தேர்டு-பார்ட்டி ஆடியன்ஸ் டேட்டாவிலிருந்து (வயது, பாலினம் மற்றும் ஆர்வங்கள் போன்றவை) பெறப்பட்ட டேட்டாவை கூகுள் அனலிட்டிக்ஸ் உடன் பயன்படுத்தும்.

டிஸ்ப்ளே அட்வர்டைசிங் / ரீமார்க்கெட்டிங்கிற்கான கூகுள் அனலிட்டிக்ஸ் சேவையிலிருந்து விலக, கன்ஸ்யூமர் பின்வரும் லிங்க்கில் உள்ள கூகுள் அனலிட்டிக்ஸ் ஆப்ட்-அவுட் பிரவுசர் ஆட்-ஆன் வசதியைப் பயன்படுத்தலாம்: https://tools.google.com/dlpage/gaoptout/. கன்ஸ்யூமர்ஸ் தங்களின் கூகுள் அக்கவுண்ட்டிற்கான ஆட்ஸ் செட்டிங்ஸை பயன்படுத்துவதன் மூலம் கூகுள் டிஸ்ப்ளே நெட்வொர்க் ஆட்ஸைத் தங்களுக்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

இணையதளத்தை அணுகுவதன் மூலம், டிரான்ஸ்யூனியன் CIBIL-இன் டேட்டாபேஸில் சேர்ப்பதற்காக பர்சனல் இன்ஃபர்மேஷனை வழங்குவதன் மூலம் அல்லது புராடக்ட்ஸ் மற்றும் சர்வீசஸைப் பயன்படுத்துவதன் மூலம், உங்களது தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளபடி டிரான்ஸ்யூனியன் CIBIL மற்றும் அதன் அபிலியேட்ஸால் சேமிக்கப்படுவது, பயன்படுத்தப்படுவது, மாற்றப்படுவது, திருத்தப்படுவது, தொகுக்கப்படுவது, பிரிக்கப்படுவது, பகிரப்படுவது மற்றும் விநியோகிக்கப்படுவது ஆகியவற்றுக்கு நீங்கள் இதன் மூலம் சம்மதம் தெரிவிக்கிறீர்கள்.

உங்களுடைய பர்சனல் இன்ஃபர்மேஷன் குறித்த உங்களது கவலைகளைத் தீர்ப்பது

இந்தக் கொள்கை அல்லது உங்கள் பர்சனல் இன்ஃபர்மேஷன் தொடர்பான ஏதேனும் கோரிக்கைகள், கேள்விகள், விளக்கங்கள் அல்லது குறைகளை எங்களது குறைதீர்க்கும் அதிகாரியிடம் பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம்:
பெயர்: திரு. N போஹாரே, குறைதீர்க்கும் அதிகாரி:
டிரான்ஸ்யூனியன் CIBIL லிமிடெட்
ஒன் வேர்ல்ட் சென்டர், டவர் 2A, 19வது தளம்,சேனாபதி பாபட் மார்க்,
லோயர் பரேல்,மும்பை - 400 013.
மின்னஞ்சல் முகவரி: nodalofficer@transunion.com
ஹெல்ப்லைன் எண்: 022-61404300 (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் மாலை 6 வரை)

நீங்கள் மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் பதிலைப் பெற விரும்பினால், உங்கள் பெயர் மற்றும் தபால் முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைச் சரியாகக் குறிப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அனைத்து குறைகளும் விரைவான முறையில் நிவர்த்தி செய்யப்படும். குறை தொடர்பான முழுமையான விவரங்கள் வழங்கப்பட்டிருந்தால், குறைதீர்க்கும் அதிகாரி புகார் பெறப்பட்ட தேதியிலிருந்து அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்வார்.

ஆளும் சட்டம்

இந்தத் தனியுரிமை அறிக்கை, இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டது. இந்தக் கொள்கை அல்லது இணையதளம் தொடர்பாக எழும் எந்தவொரு விவகாரத்தையும் தீர்ப்பதற்காகத் தொடங்கப்படும் எந்தவொரு நடவடிக்கை, வழக்கு அல்லது பிற சட்டரீதியான நடைமுறைகள், மும்பையில் உள்ள நீதிமன்றங்களின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும்.

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஆகஸ்ட் 5, 2025